ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

திரிஷ்யம்-2 படத்தின் வெற்றியை சமீபத்தில் ருசித்த நடிகர் மோகன்லால், தனது 40 வருட நடிப்பு பயணத்திலிருந்து அப்படியே ஒரு யூ டர்ன் எடுத்து இயக்குனர் அவதாரத்திற்கு மாறியுள்ளார். 'பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' (Barroz ; Guardian Of D Gamas Treasure) என்கிற படத்தை இயக்கப்போவதாக கடந்த 2019லேயே அறிவித்த அவர், அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை இன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மோகன்லாலை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் பாசில், நடிகர்கள் மம்முட்டி, பிரித்விராஜ், திலீப், இயக்குனர்கள் பிரியதர்ஷன், சத்யன் அந்திக்காடு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நானூறு வருடங்களுக்கு முன் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது, சேர்த்து வைத்த சொத்துக்களை பாரோஸ் என்கிற பாதுகவாலன் காவல் காத்து வருவதாக ஒரு புனைவு கதை ஒன்று கேரளாவில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த கதையைத்தான் படமாக இயக்கி தானே ஹீரோவாகவும் நடிக்கிறார் மோகன்லால்
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த வரலாற்று படத்தில் லிடியன் நாதஸ்வரம் என்கிற 13 வயது சிறுவனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார் மோகன்லால். நாற்பது வருடங்களுக்கு முன் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோ பொன்னூஸ் என்பவர் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்..




