விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கில் அவரது தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு இரண்டு படங்கள் வெளிவந்தன. ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான 'கேம் சேஞ்ஜர்', அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்க சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான 'சங்கராந்திகி வஸ்தனம்'.
இதில் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான 'சங்கராந்திகி வஸ்தனம்' படம் அதை விட மூன்று மடங்கு அதிகமாக 160 கோடி வசூலித்து பெரும் வெற்றிப் படமாகியுள்ளது. அதனால், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் அனில் ரவிப்புடி, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். தயாரிப்பாளர் தில் ராஜு முடி காணிக்கை செலுத்தி மொட்டை அடித்துக் கொண்டார்.
பெரிய பட்ஜெட் படமான 'கேம் சேஞ்ஜர்'அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில் சிறிய படமான 'சங்கராந்திகி வஸ்தனம்' படம் அவருக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. பட்ஜெட்டும், பிரம்மாண்டமும் ஒரு படத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பதை இந்த வெற்றி காட்டுவதாக தெலுங்குத் திரையுலகினர் பேசிக் கொள்கிறார்களாம்.