மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ‛கிங்டம்'. இந்த மாதம் 31ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இதற்கு முன்பு மல்லிராவா, ஜெர்சி ஆகிய படங்களை இயக்கி, வெற்றி கொடுத்தவர் இயக்குனர் கவுதம். நானி நடித்த ஜெர்சி தேசிய விருது பெற்றது. அதனால், கிங்டம் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு.
தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான பாக்யஸ்ரீ ஹீரோயின். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நாளை மறுநாள் திருப்பதியில் நடக்க உள்ளது. பொதுவாக, தெலுங்கு சினிமா பிரமோஷன் நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் அதிகம் நடந்தாலும், சிலர் சென்டிமென்ட்டாக திருப்பதியில் நடத்துவார்கள். திருப்பதி பெருமாளை வணங்கிவிட்டு, பின்னர் தங்கள் பட பிரமோசனை தொடங்குவார்கள்.
பிரபாஸ் உள்ளிட்ட பல ஹீரோக்கள் இப்படி செய்து இருக்கிறார்கள். அந்தவகையில் விஜய் தேவரகொண்டாவும் திருப்பதியை டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு தேர்ந்தெடுத்துள்ளார். கிங்டம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்றாலும், ஒரு சமூக பிரச்னையை அழுத்தமாக பேசுகிறதாம்.