ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
பழம்பெரும் தயாரிப்பாளர் மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில், பல படங்களைத் தமிழில் தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். அதில் ஒன்று 'சர்வாதிகாரி'. 'தி கேலன்ட் பிளேட்' என்ற அமெரிக்க படத்தைத் தழுவி தமிழில் உருவானப் படம்.
எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, எம்.என்.நம்பியார், வி.நாகையா, புளிமூட்டை ராமசாமி, எஸ்.சரோஜா, எஸ்.ஆர்.ஜானகி, கருணாநிதி, வி.கே.ராமசாமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் 25வது படம். இந்தப் படத்துக்கு முதலில் வசனம் எழுத இருந்தவர் கருணாநிதி. மாடர்ன் தியேட்டர்ஸின் முந்தைய படமான எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' சூப்பர் ஹிட்டானதால் இந்தப்படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் கருணாநிதி அரசியலில் பிசியாகி விட்டதால் ஆசைத்தம்பி எழுதினார்.
தனது 25வது படம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பினார். படத்திற்கு முதலில் 'போர்வாள்' என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தலைப்பு புதுமையாக இல்லை என்பதற்காக எம்ஜிஆர் 'சர்வாதிகாரி' என்ற பெயரை சிபாரிசு செய்தார். அதனை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டார்.
இந்தப் படத்தின் ஆக்ரோஷமான கத்திச் சண்டைகள் அப்போது அதிகம் பேசப்பட்டன. டூப் போடாமல் எம்ஜிஆர் முறைப்படி வாள் பயிற்சி பெற்று சண்டை காட்சியில் நடித்தார். தட்சிணாமூர்த்தி இசை அமைத்திருந்தார். இந்த படம் திரையிட்ட தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. திருச்சியில் மட்டும் 141 நாட்கள் ஓடியது.