ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
சென்னையில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் நடிகர் சூர்யா. 50 என்ற எண் பொறிக்கப்பட்ட தொப்பி அணிந்து கேக் வெட்டி, தனது மனைவி ஜோதிகாவுடன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தொடங்கினார். அவர் 50வது பிறந்தநாள் கொண்ட்டாடம் கோவாவில் முன்னதாகவே தொடங்கியதாக கூறப்படுகிறது. மற்ற பிறந்தநாள்களை விட, 50 என்பது என்பது சிறப்பான வருடம் என்பதால், நேற்று காலை முதலே ரசிகர்கள், நண்பர்கள், திரையுலகினர் அவருக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்தனர்.
சென்னை தி.நகரில் அமைந்துள்ள அவர் வீட்டு முன்பு ரசிகர்கள், அகரம் அமைப்பில் பலன் பெற்றவர்கள், அதில் படிப்பவர்கள், தன்னாலர்கள் என ஏகப்பட்டபேர் குவிந்து சூர்யாவுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்தனர். அந்த மகிழ்ச்சியில் வீட்டு மாடியில் ஏறி நின்று அவர்கள் வாழ்த்தை ஏற்று, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
பின்னர், வீட்டில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். அவர் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடிக்கும் கருப்பு மற்றும் வெங்கி அட்லுாரி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா 46 படக்குழுவும் சர்ப்பிரைஸ் கொடுத்தனர். கருப்பு பட டீசர் வெளியானது, சூர்யா 46 பர்ஸ்ட் லுக் வெளியானது. அதைத் தொடர்ந்து சென்னை காளிகாம்பாள் கோயிலில் மனைவி ஜோதிகாவுடன் இணைந்து தரிசனம் செய்தார் சூர்யா.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்தனர். இந்த பிறந்தநாள் சூர்யாவுக்கும், அவர் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத நாளாகிவிட்டது. தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், தனது பிறந்தநாளை இப்படி கொண்டாடியிருக்கிறார் சூர்யா.