அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கிங்டம்'. இதில் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று பல ஊர்களில் இந்தபடம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த படத்திற்கு பாதுகாப்பு கேட்டு படக்குழு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இப்பட நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‛‛தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இந்தக்கதை கற்பனையானது என படத்தின் கார்டில் குறிப்பிட்டுள்ளோம். அதையும் மீறி மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம். கிங்டம் படத்திற்கு ஆதரவு தாருங்கள்'' என தெரிவித்துள்ளனர்.