ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தெலுங்கு, மலையாள படங்களை இயக்கிய மணிரத்னத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்பியவர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவை தம்பி. அப்போது வெற்றிகரமான ஜோடிகளாக இருந்த அம்பிகா, ராதா, மோகன் இணைந்து நடிக்க அதற்கேற்ப ஒரு கதையை தயார் செய்து அதனை மணிரத்னம் இயக்க ஏற்பாடானது. இதற்கு மணிரத்னமும் ஒத்துக் கொண்டார்.
அதற்கு முன்னதாக அவர் 'பகல்நிலவு' படத்தை இயக்கினார். அந்த படம் முடிந்து வரும்வரை கோவை தம்பி காத்திருந்தார். பின்னர் மணிரத்னத்திற்கு அந்த கதையை இயக்க விருப்பமில்லை. அது ஒரு சாதாரண காதல் கதை. அதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம் என்று கூறி 'மவுன ராகம்' படத்தின் கதையை சொன்னார். ஆனால் அந்த கதை கோவை தம்பிக்கு பிடிக்கவில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் மணிரத்னம் 'இதய கோவில்' படத்தை இயக்கினார். விருப்பமே இல்லாமல் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளை இயக்கினார். படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று மணிரத்னம் விரும்பினார், ஆனால் கோவை தம்பி, ராஜ ராஜனை நியமித்தார்.
ஒரு வழியாக படம் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் பாடல்கள் பேசப்பட்டது. பின்னாளில் இது குறித்து பேசிய மணிரத்னம், "இதயகோவில் மாதிரியான படங்களை இயக்க நான் சினிமாவிற்கு வரவில்லை" என்று கூறினார். கோவை தம்பி குறிப்பிடும்போது இதயகோவில் படத்தின் பட்ஜெட்டை மணிரத்னம் 3 மடங்கு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.