ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
நடிகை பார்வதியை பொருத்தவரை கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் பார்வதி. இந்த நிலையில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‛உள்ளொழுக்கு' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பார்வதி. இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடித்துள்ளார். கிரிஸ்டோ டோனி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 21ம் தேதி இந்த படம் வெளியாகும் என ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆச்சரியம் என்னவென்றால் மலையாளத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் அவ்வளவு பிரபலமில்லாத ஒரு நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார் என்பது தற்போது வெளியாகி உள்ள டீசர் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நடிகர் பார்ப்பதற்கு ஒரு சாயலில் பஹத் பாசிலின் தோற்றத்தில் இருப்பதால் அவரது லுக் அலைக் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.