32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
மலையாள நடிகை பார்வதி கடந்த 20 வருடங்களாக மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து மாறி மாறி நடித்து வருகிறார். அதே சமயம் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் செலெக்ட்டிவ்வான படங்களில் மட்டுமே நடிக்கிறார். இன்னொரு பக்கம் மலையாள திரையுலகில் இவர் எப்போதுமே நடிகைகளின் பாதுகாப்புக்கும் பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் பெரும்பாலான படங்களுக்கு இவரை அணுகுவதில்லை என்பதும் இன்னொரு காரணம்.
சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாவதற்கு கூட, ஏழு வருடங்களுக்கு முன்பு பார்வதி உள்ளிட்ட பல நடிகைகள் ஒன்று சேர்ந்து துவங்கிய சினிமா பெண்கள் நல அமைப்பு கொடுத்த அழுத்தம் தான் காரணம். இதன் மூலமாக சினிமாவில் பெண்களுக்கான சின்ன சின்ன உரிமைகளையும் பாதுகாப்புகளையும் பெற்று தர முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வயநாட்டில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, “படப்பிடிப்பிற்கு செல்லும் போதெல்லாம் அங்கே பெண்களுக்கு போதிய பாத்ரூம் வசதி இல்லாததை கவனிப்பேன். அதனால் நான் பெரும்பாலும் படம் சம்பந்தப்பட்டவர்களிடமும், நடிகர் சங்கத்திலும் கூட முக்கியமான படப்பிடிப்பு தளங்களில் பாத்ரூம் வசதியை நிரந்தரமாக செய்து கொடுக்கலாம் என்று அவ்வப்போது கோரிக்கை வைப்பேன். இதனால் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகளே அதாவது அந்த பொறுப்பு வகிக்கும் சில நடிகர்களே என்னை பாத்ரூம் பார்வதி என்று தான் கிண்டலடிப்பார்களாம். சில படங்களில் பணியாற்றிய போது என்னுடன் நடித்த சக கலைஞர்கள் சொன்னதன் மூலம் இந்த விஷயம் தெரியவந்தது” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.