தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
நடிகை ஷோபனா கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பயணித்து வருகிறார். குறிப்பாக தமிழில் தளபதி, சிவா, இது நம்ம ஆளு, பொன்மனச் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து 90களில் ரொம்பவே பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் ஒருகட்டத்தில் தான் நடத்தி வரும் நடன பள்ளியில் கவனம் செலுத்த ஆரம்பித்தவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மோகன்லாலுடன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து 'தொடரும்' என்கிற படத்தில் தற்போது நடித்துள்ளார் ஷோபனா.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “நான் படப்பிடிப்பிற்கு சென்றதுமே கேரவனை காட்டி, என்னுடைய காட்சிகள் முடிந்ததும் அதில் சென்று ஓய்வு எடுக்குமாறும் தேவைப்படும் போது அழைக்கிறோம் என்றும் கூறினார்கள். நான் பிசியாக நடித்த காலகட்டத்தில் இதுபோன்று கேரவன் கலாசாரம் இல்லை. அப்போதெல்லாம் நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன், தொழில்நுட்ப கலைஞர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். மற்றவர்கள் நடிப்பதை பார்த்துக் கொண்டிருப்போம். இப்போது நானே விரும்பாவிட்டாலும் கூட, மேடம் நீங்கள் கேரவனுக்கு போய் ரெஸ்ட் எடுங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு கேரவனுக்குள் சென்று வருவதற்குள் ஏதோ வெளி உலக தொடர்பே அறுந்துவிட்டது போல தெரிகிறது.
மேலும் கேரவனுக்குள் அமர்ந்து இருக்கும்போது தேவையில்லாமல் மொபைல் போனில் சோசியல் மீடியா செய்திகள் என்று நம் கவனம் அந்த பக்கம் திசை திரும்புகிறது. மீண்டும் நம்மை ஷாட்டுக்காக அழைக்கும் போது ஏற்கனவே நடித்த காட்சியின் தொடர்ச்சியை மீண்டும் மனதிற்குள் கொண்டு வந்து நடிப்பதில் தடுமாற்றமும் ஏற்படுகிறது. கேரவன் என்பது ரொம்பவே செலவான ஒரு விஷயம். ஏதோ தவிர்க்க முடியாமல் காலநிலை சரியில்லை என்றால் மட்டுமே அதை பயன்படுத்தலாம். மற்றபடி எனக்கு கேரவன் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லை” என்று கூறியுள்ளார்.