என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தி திரையுலகிலும் கால் பதித்து பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பரான ஆண்டனி தட்டில் என்பவருடன் காதல் திருமணம் செய்த உற்சாகத்திலும் இருக்கிறார். இன்னொரு பக்கம் ஹிந்தியில் 'தெறி' ரீமேக்காக உருவாகி சமீபத்தில் வெளியான 'பேபி ஜான்' திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். வருண் தவான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக வாமிகா கபி நடித்துள்ளார்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாகவே மும்பையில் முகாமிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்போது ஒரு ஹோட்டலுக்கு வந்த அவரை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் போஸ் கொடுக்க சொல்லி கேட்டனர். அவரும் அங்கிருந்த கிறிஸ்துமஸ் மரம் அருகில் நின்று போஸ் கொடுத்தார்.
அப்போது ஒரு போட்டோ கிராபர் 'கிரீத்தி' என்று அவரை அழைத்தார். அதை திருத்திய கீர்த்தி சுரேஷ், 'கிரீத்தி அல்ல; கீர்த்தி' என்று கூறினார். அதேபோல இன்னொரு புகைப்படக்காரர் 'கீர்த்தி தோசா' என்று அழைத்தார். அதற்கும் புன்னகை மாறாமல், 'கீர்த்தி தோசா அல்ல; கீர்த்தி சுரேஷ்' என்று அவரை திருத்தி உச்சரிக்கும்படி கூறிவிட்டு கிளம்பி சென்றார். புகைப்படக்காரர்கள் பெயர் சொல்லி அழைப்பதையே விரும்பாத கதாநாயகிகள் மத்தியில் பெயரை மாற்றி கிண்டல் அடிப்பது போல் கூறிய போதும், அதை புன்னகையுடன் கீர்த்தி சுரேஷ் கடந்து சென்றது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.