மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகர் ராம் சரண் தற்போது கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் வி மெகா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று ராம் சரண் தயாரிக்கும் முதல் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை வி மெகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல ஹிந்தி நடிகர் அனுபாம் கிர் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‛தி இந்தியா ஹவுஸ்' என்று தலைப்பு வைத்துள்ளனர். அதனை வீடியோ உடன் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.