டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் மாருதி டைரக்ஷனில் அடுத்த வெளியாக தயாராகி வரும் படம் தி ராஜா சாப். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் நாயகிகளாக நடித்துள்ள இந்த படம் வரும் 2026 ஜனவரி 9ல் சங்கராந்தி பண்டிகையில் ரிலீஸ் ஆக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதற்கு முன்பு இந்த படம் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என இரண்டு மாதங்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் இரண்டு முறை மாற்றப்பட்டு கடைசியாக இந்த தேதி அறிவிக்கப்பட்டது.
சமீபநாட்களாக இந்த படம் வரும் 2026 ஜனவரியிலும் வெளியாகாமல் தள்ளிப்போகும் என்பது போல சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தகவல்களில் உண்மையில்லை.. படம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும். படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. டிசம்பர் 26 ஆம் தேதி பர்ஸ்ட் காபி ரெடி ஆகிவிடும். அதனால் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.