பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் |
மலையாள முன்னணி நடிகரான திலீப், பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். அதன்பிறகு நடிகை கடத்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளை கொல்ல திட்டமிட்டார் என்றும், இதற்காக அவர் ஜாமீனில் விடுதலையானதும் ஒரு முக்கிய நபரை சந்தித்து திட்டம் தீட்டினார் என்றும் மலையாள இயக்குனர் பாலசந்திரகுமார் புகார் அளித்தார்.
இதனால் நடிகை கடத்தல் வழக்குடன் திலீப் மீது கொலை சதிதிட்ட வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் பாலசந்திரகுமாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திலீப்பின் நண்பரும், நட்சத்திர ஓட்டல் அதிபருமான சரத்நாயரை போலீசார் கைது செய்தனர். சரத்நாயரும், திலீப்பும் சேர்ந்த கொலை சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரத்தை பாலசந்திரகுமார் போலீசிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கொலை சதி வழக்கு தீவிரமடைந்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், தற்போதைய மனைவி காவ்யா மாதவன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் திலீப் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.