2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2' வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த வருடம் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவருடைய நண்பருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அது அவருடைய உறவினரான, தற்போதைய ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாணுடன் கசப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் 'புஷ்பா 2' வெளியீட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அப்போது பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது அல்லு அர்ஜுன் அனுமதியுடன் நடைபெற்ற ஒன்றா என்பது இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் இதை அரசியல் கண்ணோட்டத்துடனும் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
நேற்று ஹைதராபாத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனது ரசிகர்களை சந்தித்துப்
பேசியுள்ளார் அல்லு அர்ஜுன். அதன்பிறகே ரசிகர் மன்றம் குறித்த அறிவிப்பு
வெளியாகி உள்ளது.
இதுநாள் வரையில் தனியாக ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளாத அல்லு அர்ஜுன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.