முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
ஹிந்தியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ஷெர்சா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை இயக்கியவர் நம் தமிழ் பட இயக்குனரான விஷ்ணுவர்தன் தான். ஷெர்சா படம் மூலம் மொழி தாண்டிய ரசிகர்களையும் பெற்றுள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. அந்த வகையில் அவருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் தமிழ் ரசிகர் ஒருவர் சித்தார்த் மல்ஹோத்ராவின் டுவிட்டர் பக்கத்தில், தான் அவருடைய மிகப்பெரிய ரசிகர் என்றும் அவர் தமிழ் படங்களிலும் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆர்வத்தையும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த சித்தார்த் மல்ஹோத்ரா, நிச்சயமாக நடிப்பேன் என கூறியிருந்தார். அதேசமயம் சித்தார்த் மல்கோத்ராவின் இந்த பதிலை ரீ-டுவீட் செய்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, விரைவில் நாம் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது பாலிவுட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள ராஷ்மிகா மந்தனா, மிஷன் மஜ்னு என்கிற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.