பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
திரையுலகை பொறுத்தவரை பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வதும் ஓரிரு வருடங்களில் அல்லது பத்து இருபது வருடங்கள் கழித்தும் கூட தங்களுக்குள் விவாகரத்து செய்துகொண்டு பிரிவதும் சகஜமாக நடக்கும் ஒன்றுதான். அந்த வகையில்தான் பாலிவுட் நடிகர் ஆமிர்கான், ஏற்கனவே தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
15 வருடங்கள் இவர்களது திருமண வாழ்க்கை கடந்த நிலையில், அதற்கு அடையாளமாக ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் சமீபத்தில் தாங்கள் இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டதாகவும் ஆமீர் கானும் கிரண் ராவும் அறிவித்தனர். அதேசமயம் நாங்கள் நண்பர்களாக பழகுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தங்களது மகனுக்கு நல்ல பெற்றோராக இருப்போம் என்றும் கூறினர். அதை நிரூபிப்பது போல ஆமீர்கான் நடித்து வரும் லால் சிங் சத்தா படப்பிடிப்பு லடாக்கில் நடந்தபோது அவருக்கு உதவியாக கிரண் ராவும் உடன் சென்றிருந்தார். படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அந்த சமயத்தில் வைரலாக பரவின.
இந்த நிலையில் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தவர்கள் போலவே அல்லாமல், தனது நண்பர் ஒருவரின் வீட்டு திருமணத்திற்கு கிரண் ராவுடன் ஜோடியாக சென்று கலந்து கொண்டுள்ளார் ஆமீர் கான். ஒருவேளை மௌன ராகம் படத்தில் வருவதுபோல பிரிந்து வாழும்போதே நண்பர்களாக பழகினால் மீண்டும் தங்களுக்குள் சேர்ந்து வாழும் அளவுக்கு புரிதல் ஏற்படும் என நினைக்கிறார்களோ என்னவோ.