வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழில் முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆக., 14ல் வெளியாகிறது. தற்போது படம் தொடர்பான பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ராக்கி, கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இதுகுறித்து லோகேஷ் கூறியதாவது, "கைதி 2 படத்தை தொடங்குவதற்கு இன்னும் 8 மாதங்கள் இடைவெளி உள்ளது. இதற்கிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்க மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்பு கலையை மேற்கொள்ள கடந்த சில மாதங்களாக புக்கெட் பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்'' என்றார்.
லோகேஷ் பெரும்பாலும் அதிரடி, ஆக் ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதைகளையே இயக்கி வருகிறார். இப்போது நடிக்கும் படமும் கேங்ஸ்டர் கதையிலேயே உருவாகிறது.