மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்துவிட்டது. என்றாலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் தான் இயக்கியுள்ள மதராஸி படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் முருகதாஸ். இந்த படம் கண்டிப்பாக எனக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று கூறும் அவர், இந்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கிய கஜினி படத்தின் திரைக்கதையை போலவும், விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தின் ஆக்ஷன் பாணியையும் கலந்து இயக்கி இருக்கிறேன். அதனால் இந்த மதராஸி படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
மேலும், மதராஸி என்ற வார்த்தையை வட இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக தமிழர்களை அவர்கள் மதராஸி என்றுதான் சொல்கிறார்கள். இதனால் ஏற்படும் சில பிரச்சனைகளை மையமாகக் கொண்டுதான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி கஜினி படத்தை போன்று இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிரச்சனை இருக்கும். அதிலிருந்து எப்படி அவர் வெளியேறி வருகிறார் என்ற சில சிக்கலான விஷயங்களும் இந்த கதையில் உள்ளது என்று கூறும் முருகதாஸ், ஏற்கனவே நான் இயக்கி வெற்றி பெற்ற தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி போன்ற படங்கள் வரிசையில் இந்த மதராஸியும் இடம்பெறும் என்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.