அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 'தி கோட்' . அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படம் இழுபறியில் இருந்தது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட் பிரபு விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார்.
இந்த படமும் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஜானரில் தான் உருவாகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சிவகார்த்திகேயன் விருப்பத்தின் படி மிருணாள் தாகூர் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இப்போது மலையாளத்தில் 'லோகா' படம் வெற்றி பெற்றதால் கல்யாணி பிரியதர்ஷனை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் 'மாநாடு' படத்தில் நடித்திருந்தார். இதேபோல் சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ' படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.