ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் 2016ல் வெளிவந்த படம் 'தெறி'. அப்படம் இங்கு 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தை அட்லி ஹிந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் தயாரிக்க வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க இன்று வெளியானது. படத்திற்கு காலை முதலே நல்ல விமர்சனங்கள்தான் கிடைத்து வருகிறது. ரசிகர்களின் வரவேற்பில் வெற்றிப் படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி தனது அபிமான இயக்குனர் என்பதால் இப்படத்திற்கு நடிகர் விஜய் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த வருண் தவான், “நன்றி தளபதி விஜய் சார், உங்கள் முன் நாங்கள் எப்போதும் குழந்தைகள்தான்,” என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முதல் நாள் வசூலாக சுமார் 15 கோடி வரை 'பேபி ஜான்' வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் படம் எப்படியும் 100 கோடியைக் கடந்துவிடும் என்றும் பாலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.
'ஜவான்' படம் மூலம் ஹிந்தியில் இயக்குனராக வெற்றி பெற்ற அட்லி, 'பேபி ஜான்' படம் மூலம் தயாரிப்பாளராக வெற்றி பெறுவாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.