காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அமீர் கான், 'சித்தாரே ஜமீன் பர்' எனும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‛கூலி' படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்துள்ளார். சித்தாரே ஜமீன் பர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் அமீர்கான் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "எனது இளம் வயதில் புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தது. அப்போது நான் இரவு முழுவதும் கூட மது அருந்தி இருக்கிறேன். அது நல்லதுக்கு அல்ல என எனக்கு தெரிந்தும் கூட என்னால் அப்போது மது பழக்கத்தை கைவிட முடியவில்லை. ஆனால், இப்போது மது அருந்தும் பழக்கத்தை முழுவதுமாக கைவிட்டேன்" என அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் அமீர் கான்.