ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் நடிக்கும் ஹாலிவுட் வெப் தொடர் 'சிட்டாடல்'. வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. இந்த தொடரை ஆசியாவில் பிரபலப்படுத்தும் பணியை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக மும்பையில் நடந்த விழாவில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா பேசியதாவது: சிட்டாடல் தொடரில் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியபோது அதை ஒரு உலகளாவிய படைப்பாக உருவாக்க விரும்பினர். இது உலகை உண்மையாக இணைக்கும். வெவ்வேறு தோல் நிறங்களைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமல்ல, மக்கள் பேசும் விதத்தைக் கேட்பதன் மூலமும், உண்மையில் கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலமும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாடு மற்றும் கண்டம் முழுவதும் பரவக்கூடிய நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளது. எனவே, எனக்கு கதை கூட முழுமையாக தெரியாது, ஆனாலும் இதில் நான் நடித்திருக்கிறேன்” என்றார்.