வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஏய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரியும் பங்கேற்றார். அப்போதும் நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் ரிச்சர்டு முத்தம் கொடுத்தார்.
பொது மேடையில் நடந்த இந்த செயல் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருந்ததாகவும் இந்திய கலாசாரத்தை அவமதித்து விட்டதாகவும் பல போராட்டங்கள் நடந்தது. ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு மீது ராஜஸ்தானில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2017ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது.
பின்னர் இந்த வழக்கில் இருந்து ரிச்சர்டு விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஷில்பாவை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.