ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வருண் தவான், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'சிட்டாடல் ஹனி பன்னி'. இத் தொடர் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. அத்தொடரின் முதல் டிரைலரை பத்து நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். அது தொடரின் கதை என்ன என்பதை ஓரளவுக்குப் புரிய வைப்பதாக இருந்தது.
இன்று இரண்டாவது டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். அதில் சமந்தாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது. சீக்ரெட் ஏஜன்ட் கணவன், மனைவியாக இருந்து ஒரு பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆன பின் இருவரும் பிரிகிறார்கள். அவர்களது பெண் குழந்தையைக் காப்பாற்ற அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் இதன் கதையாக இருக்கிறது.
இத்தொடரில் கேகே மேனன், சிம்ரன், ஷாகிப் சலீம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இத்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இதற்கு முன்பு சமந்தா நடித்த 'த பேமிலி மேன்' வெப் சீரிசையும், ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடித்த 'பார்ஸி' வெப் சீரிசையும், துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ் நடித்த 'கன்ஸ் & குலாப்ஸ்' வெப் சீரிசையும் இயக்கியுள்ளார்கள்.




