சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகை சமந்தா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நிற்க நேரமில்லாத அளவிற்கு பிஸியான நடிகையாக தென்னிந்திய மொழிகளில் மாறி மாறி நடித்து வந்தார். ஆனால் தன் கணவர் நடிகர் நாக சைதன்யா உடனான விவாகரத்து, அதன் பிறகு மையோசிடிஸ் என்கிற நோய் பாதிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தார். செலக்டிவான அதே சமயம் தனக்கு வசதியாக இருக்கக்கூடிய ஒரு சில படங்களிலும் மற்றும் வெப் சீரிஸிலும் நடித்து வந்தார்.
அப்படி தாங்கள் 2019ல் இயக்கிய 'பேமிலி மேன்' வெப் சீரிஸில் சமந்தாவை நடிக்க வைத்ததன் மூலமாக அவரது குட் புக்கில் இடம் பெற்றிருந்த இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே இருவரும் தாங்கள் இயக்கியுள்ள 'சிட்டாடல்; ஹனி பன்னி' என்கிற ஆக்சன் வெப் சீரிஸுக்காக மீண்டும் சமந்தாவை அணுகினார்கள். ஆனால் சமந்தாவுக்கு இது ஆக்சன் வெப் சீரிஸ் என்பதால் உடலளவில் தன்னால் சமாளிக்க முடியுமா? ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை அவர்களது கிண்டலுக்கு ஆளாக நேரிடுமா என்கிற சந்தேகம் உள்ளே இருந்தது. அதனால் தனக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி மற்றும் கிர்த்தி சனோன் ஆகியோரின் புகைப்படங்களை இயக்குனர்களிடம் காட்டி இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்யுங்கள் நிச்சயமாக அந்த கதாபாத்திரத்தில் அழகாக பொருந்துவார்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கே பிடிவாதமாக உங்களால் முடியும் நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்று சொல்லி அவரை ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தனர். சமீபத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது சமந்தாவே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.




