ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் ஜோடிகளுக்கான நடன நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் 'ரவுடி பேபி' பாடலுக்கு நடனமாடியுள்ள கேபியின் புரோமோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் பிக்பாஸ் ஜோடிகள் என்கிற டான்ஸ் ஷோ விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ வெளிவந்து இணையத்தை கலக்கி வருகிறது.
விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கலக்கிய கேபி தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த வாரத்திற்கான போட்டியில் 'ரவுடி பேபி' பாடலுக்கு செமத்தியான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளார். 'ரவுடி பேபி' பாடலின் ஹிட்டிற்கு சாய் பல்லவியின் ஆட்டம் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனது நடன அசைவுகளால் பார்வையாளர்களை கட்டி போட்டிருப்பார் சாய் பல்லவி.
தற்போது அந்த பாடலை கையில் எடுத்திருக்கும் கேபி, சாய் பல்லவியை போலவே கட்சிதமாக ஆடியுள்ளார். அவர் ஆடிய நடனத்தின் புரோமோ தற்போது வெளிவந்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கேபியின் ஆட்டத்தை பார்த்த பார்வையாளர்கள் அவரது திறமையை வியந்து தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.