ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் புரோமோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். வைரலாகி வரும் இந்த புரோமோவால் நிகழ்ச்சி குறித்தான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு அடுத்தப்படியாக ரியாலிட்டி ஷோக்களுக்கு இடையேயும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜி தமிழும் 'சர்வைவர்' என்கிற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவை தற்போது தமிழில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த போட்டியில் தனி தீவில் விடப்படும் போட்டியாளர்கள் அங்கு நிலவும் சூழ்நிலைகளை சமாளித்து அவர்களே அனைத்தையும் தாக்கு பிடித்து வாழ வேண்டும். மற்ற சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களை முன்னணி ஹீரோக்கள் தொகுத்து வழங்குவது போலவே, 'சர்வைவர்' நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரோமோவை சிவகார்த்திகேயன் அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது. புரோமோவில் பேசும் அர்ஜூன், 'பரிசு ஒரு கோடி... அதை கஷ்டப்படாமல் ஜெயிக்க முடியாது' என்று கூறுகிறார்.
சர்வைவர் நிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மி, நந்தா, வனிதா விஜயகுமார், கோபிநாத் ரவி, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா, ஜான் விஜய், விதியுலேகா, விஜே பார்வதி, ஷாலு ஷம்மு, அனிகா சுரேந்திரன், சஞ்சனா சிங் ஆகிய 12 போட்டியாளர்கள் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தொலைகாட்சி நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கவுள்ளது.




