பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ரோஜா சீரியலின் கதாநாயகன் சிபு சூர்யன் அளித்த பேட்டியில், இனி சீரியலில் நடிக்கமாட்டேன் என்று கூறியதோடு தனது மனைவி இவர் தான் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் டாப் சீரியலான ரோஜா தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிபு சூர்யன். கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த அவர் இந்த சீரியலின் மூலம் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். பார்ப்பதற்கு ஹாண்ட்சம்மாக இருக்கும் இவருக்கு ரசிகைகளும் அதிகம். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்தான பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் தன்னுடைய மனைவி போட்டோவை காண்பித்து தனக்கு திருமணமாகிவிட்ட தகவலை உடைத்துள்ளார். இதன்மூலம் அவருக்கு திருமணமாகிருக்காது என நினைத்திருந்த ரசிகர்களுக்கு சிபு சைலண்ட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த பேட்டியில், தான் இனி சீரியலில் நடிக்கமாட்டேன் எனவும் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் சிபு சூரியன் கூறியுள்ளார். சிபு சூர்யனுக்கு திருமணமான தகவலும் அவரது மனைவியின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் சிபு சூர்யனின் இல்லற மற்றும் திரையுலக பயணத்துக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.