ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னித்தீவு 2.0 என்ற காமெடி ஷோவில் இந்த வாரத்திற்கான சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற புதிய காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ரோபோ சங்கர் ஜல்சா மன்னனாகவும், கவர்ச்சி நடிகை ஷகீலா ராஜமாதாவாகவும், பேபிமாதாவாக மதுமிதாவும் இணைந்து காமெடி கலாட்டக்களை அள்ளித்தெளித்து வருகின்றனர். மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டுள்ளார். அதன் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் ஐல்சா மன்னன் கன்னித்தீவு மக்களுக்காக ஜலாம்பிக்ஸ் என்னும் விளையாட்டு போட்டியை நடத்துகிறார். அதில் காமெடியில் புகழ்பெற்ற அமுதவாணன் குத்துச்சண்டை வீரராக களமிறங்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜல்சா மன்னனுடனும் கன்னித்தீவு மக்களுடனும் காமெடியாக உரையாடும் காட்சிகளும், அமுதவானனுடன் பாக்ஸிங் காட்சிகளும் அந்த புரோமோவில் இடம் பெற்றுள்ளது.
கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 ஞாயிறு இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.