ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்த குவிந்தனர். இந்நிலையில், அவரது இறப்பு அன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத பலரும் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாடகர்களான செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதியினர் விஜயகாந்த் காலமான போது தாங்கள் வெளிநாட்டில் கச்சேரியில் மாட்டிக்கொண்டதாகவும், எனவே அன்று அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்று கூறியுள்ளனர்.
தற்போது அவரது நினைவிடம் முன் அஞ்சலி செலுத்திய அவர்கள், அதன்பின் அளித்த பேட்டியில், 'ஒரு தலைவன் இப்படி தான் இருக்க வேண்டு என்று காண்பித்தவர். கடையெழு வள்ளல்களை பற்றி கேள்வி தான் பட்டிருக்கிறோம். பார்த்ததில்லை. ஆனால், கேப்டனை பார்த்திருக்கிறோம். இதற்கு பிறகு இப்படி ஒரு மனிதனை பார்ப்போமா? என்று தெரியவிலை. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று சொல்வதே பெருமை' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.