காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் |
தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த படம் 'கோர்ட் ஸ்டேட் vs நோ படி' . குறைவான பட்ஜெட்டில் உருவான படம் பல மடங்கு வசூலைக் குவித்தது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ளார். தமிழில் தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு எந்தவொரு அறிவிப்பின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கில் பிரியதர்ஷி நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்க முக்கிய வேடங்களில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் கிரித்திக் மற்றும் ராஜ்குமார், தேவையாணி தம்பதியரின் மகள் இனியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் தேவயானியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் புதிதாக விஜயகுமார், பிரபு உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்க இணைந்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.