காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் |
நடிகர் சூரி பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தாலும் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' அவரை பரபலமாக்கியது. அந்த படத்தின் பரோட்டா காமெடி தான் அவரை பிரபலமாக்க, பரோட்டா சூரியாக பிரபலமானார். அதன் பின்னர் சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் சூரிக்கு நல்ல கதாபாத்திரம் தந்தவர் சுசீந்திரன்.
கடந்த சில வருடங்களாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. தற்போது சுசீந்திரன், சூரியை சந்தித்து அவரை கதாநாயகனாக வைத்து புதிய படம் இயக்குவதற்காக கதை கூறியுள்ளார். இந்த படத்தை சூரி தயாரித்து, கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.