பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருங்கை மாடல் தான் ஷிவின். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவினை தமிழ்நாட்டில் பலரும் தங்கள் வீட்டு பெண்ணாக கருதி பாசம் செலுத்தும் அளவிற்கு மக்களின் மனதினை வென்றார். ஏற்கனவே மாடலிங் செய்து வந்த ஷிவின் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி சூப்பரான போட்டோஷூட்டுகளை வெளியிட்டு கலக்கி வருகிறார். அந்த வகையில் புத்தாண்டு தினத்தில் அழகான புடவையில் கியூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி கலக்கி வருகிறது.