ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி |

மலையாள திரையுலகில் தற்போது அதிக படங்களில் நடிப்பது யார் என்றால் அது நடிகர் நிவின்பாலி தான். ஏற்கனவே சில படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார் நிவின்பாலி. அப்படி தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை', ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ள நிவின்பாலி, மலையாளத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' மற்றும் அவர் நடித்து வரும் ஹாரர் படமான 'சர்வம் மாயா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் நிவின்பாலியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சர்வம் மாயா' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக 'கண்ணப்பா' புகழ் பிரீத்தி முகுந்தன் நடிக்க, படத்தை பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இயக்கி வருகிறார்.