இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக, அவரை வைத்து தொடர்ந்து ஐந்து படங்களை இயக்கியவர் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். மோகன்லாலை வைத்து தான் இயக்கிய வில்லன் படத்தின் மூலம் விஷால் ஹன்சிகா இருவரையும், ஆராட்டு படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானையும் முதன் முதலாக மலையாள திரை உலகில் அறிமுகப்படுத்தியதும் இவர்தான். தற்போது மலையாள இயக்குனர் சங்க தலைவராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் திரைப்படங்களையும் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது அரசியலை மையப்படுத்திய கமர்சியல் படம் ஒன்றை இயக்கத் துவங்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக அரசியல்வாதியாக நடிகர் நிவின்பாலி நடிக்கிறார். இதற்கு முன்னதாக சகாவு என்கிற படத்தில் ஒரு கம்யூனிச போராளியாக நிவின் பாலி நடித்திருந்தாலும் அரசியல்வாதியாக அவர் நடிப்பது இதுதான் முதன்முறை.. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு அரசியல் பின்பலம் கொண்ட கதையில் அவர் இணைந்துள்ளார்.
தமிழில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்துள்ள ஏழு மலை ஏழு கடல் படம் ரிலீசுக்கு நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. மேலும் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார் நிவின்பாலி. இன்னொரு பக்கம் மலையாளத்தில் நிவின்பாலியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ள டியர் ஸ்டூடண்ட்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.