'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் |

சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் வில்லன், குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த போஸ் வெங்கட் 'கன்னிமாடம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆணவ கொலையை மையமாக கொண்ட இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அடுத்து இயக்கிய 'சார்' படம் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் போஸ் வெங்கட் இயக்கும் 3வது படம் தொடங்கி உள்ளது. இந்த படத்தை கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி, வி. மதியழகன் இணைந்து தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.
படம் பற்றி போஸ் வெங்கட் கூறும்போது "விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும்.
அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இதை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றார்.