'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் நிலையில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது 1000 ஸ்டன்ட் நடிகர்கள் நடிக்கும் ஒரு பிரமாண்ட ஆக்சன் காட்சியை படமாக்கப்பட்டு வருகிறது. அன்பறிவ் மாஸ்டர்கள் இந்த சண்டை காட்சியை படமாக்குகிறார்கள்.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தை அடுத்து புச்சி பாபு சனா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ராம்சரண். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஒரு பிரபல விளையாட்டு கலைஞரின் பயோபிக் கதையில் உருவாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியான நிலையில் படக்குழு அதை மறுத்துள்ளது.
இது குறித்து இயக்குனர் புச்சி பாபு சனா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஆர்.சி 16 என்று தற்போது அழைக்கப்படுகிறது. இப்படம் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் தயாராகிறது. ஆனால் எந்த பிரபலமான விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்ட கதையில் உருவாகவில்லை. நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க இப்படம் ஒரு கற்பனையான விளையாட்டு கதையில் உருவாகிறது என்று அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் அடுத்த படத்தில் ராம்சரண் ஒரு விளையாட்டு வீரராக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.