தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவில் கிளாமர் ஹீரோயினாக வலம் வந்தவர் ரவீனா டாண்டன் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர். பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து விருதுகளை வென்றவர். தமிழில் ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்த நிலையில் தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், கேஜிஎப்-3 படத்தில் தான் நடிக்க இருப்பது குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், கேஜிஎப் 2 படத்தில் மறைந்த இந்திராவின் மாதிரியான இந்திய பிரதமராக நடித்திருந்தேன். அந்த படத்தின் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது என்று கூறியுள்ள ரவீனா டாண்டன், அடுத்து கேஜிஎப் படத்தின் மூன்றாம் பக்கத்தில் நடிப்பதற்காக செட்டுக்குள் செல்வதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்திலும் எனக்கு ஒரு அழுத்தமான கதா பாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.