தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் இரட்டை இசை அமைப்பாளர்கள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். வெற்றிப் பயணம் சென்று கொண்டிருக்கும்போது இரட்டையர்கள் பிரிந்து, அவர்களில் ஒருவர் மட்டுமே தொடர்ந்து இசையமைப்பில் ஜொலித்தார்கள்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் வெற்றி பெற்ற இசை அமைப்பாளராக வலம் வந்தார்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையார்கள் பிரிந்த பிறகு எம்.எஸ்.விஸ்நாதன்தான் தொடர்ந்து இசை அமைத்தார். ராமமூர்த்தியால் தனியாக பயணத்தை தொடர முடியவில்லை. அதேபோன்று சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் பிரிந்தபோது கணேஷால் பயணத்தை தொடரமுடியவில்லை.
இந்த வரிசையில் வருகிறவர்கள்தான் மனோஜ் - கியான் இரட்டையர்கள். இந்தியில் 'ரூஹி' என்ற படம் மூலம் அறிமுகமாகி இருந்தனர். தமிழில் 'ஊமை விழிக'ள் படத்தின் மூலம் அறிமுகமானார்கள்.
இப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டானது. 'மாமரத்து பூவெடுத்து' என்ற டூயட் பாடல் மிகப்பெரும் ஹிட். மேலும் 'ராத்திரி நேரத்து பூஜையில்', பிரபல பழம்பெரும் பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் பாடிய 'தோல்வி நிலை என நினைத்தால்' பாடல் என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
'ஊமை விழிகள்' கூட்டணியில் உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்தனர். ஊமை விழிகள் கூட்டணியில் இருந்து விலகி இசை அமைத்த வெளிச்சம், உரிமை கீதம், மேகம் கருத்திருக்கு உள்ளிட்ட பல படங்களின் பால்களும் ஹிட்டானது.
இப்படி பல படங்களில் பல மியூசிக்கல் ஹிட் கொடுத்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. கியான் வர்மா என்று தனியாக இசையமைத்த கியான் மரணம் அடைந்தார். மனோஜ் மட்டும் மனோஜ் பட்நாகர் என்ற பெயரில் 'என்றென்றும் காதல், குட்லக்' உள்ளிட்ட படங்களை இயக்கி இசையமைக்கவும் செய்தார். இதில் இயக்குனராக அவர் தோல்வி அடைந்ததும் மெல்ல மெல்ல சினிமாவை விட்டு விலகினார்.