அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சின்னத்திரை நடிகரான தினேஷ் நீண்ட இடைவெளிக்கு பின் சீரியலில் வில்லனாக என்ட்ரி கொடுக்கிறார். ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உருவாகி வரும் கிழக்கு வாசல் தொடரில் கேங்ஸ்டர் சிவா என்கிற ரோலில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வந்தது. இதுகுறித்து தினேஷ் கூறிய போது, 'கிழக்கு வாசல் சீரியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு நெகடிவ் ரோலில் நடிக்கிறேன். என்னுடைய இந்த புதிய பயணத்தை ரசிகர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்' என கூறியுள்ளார். புதுக்கவிதை, பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2 ஆகிய தொடர்களின் மூலம் ஏற்கனவே பிரபலமான தினேஷ், கிழக்கு வாசல் தொடரில் வில்லனாக எண்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.