ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

கன்னூரில் பிறந்த கேரளப் பெண் மீனாட்சி தினேஷ். 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, 'மிஷன் சி, 18பிளஸ், ரெட்ட' உள்ளிட்ட பல படங்களில் நடித்து விட்டு தற்போது 'லவ் மேரேஜ்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். விக்ரம் பிரபுவை வயது வித்தியாசம் பாராமல் காதலிக்கும் கொழுந்தியாள் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''தமிழ் ரசிகர்களிடம் இருந்து எனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லவ் மேரேஜ் படத்தில் நடித்தது ஒரு புதிய பரிமாணத்தை ஆராய ஒரு சிறப்பான வாய்ப்பாக எனக்கு அமைந்தது, மேலும் என்னை தேர்வு செய்ததற்காக பட குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
பல்வேறுபட்ட மற்றும் சவாலான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். ஸ்டீரியோடைப்களை உடைத்து, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சூர்யா சாரின் பெரிய ரசிகை நான். அவருடன் பணிபுரிவது எனது வாழ்நாள் கனவு, ஒருநாள் அந்த கனவு நனவாகும் என்று நம்புகிறேன்'' என்கிறார்.