பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

காய்கறி, பழ வகைகளில், விலங்கினங்களில் மரபியல் மாற்றம் செய்து இருக்கிறார்கள். அப்படி மனிதனில் மரபணு மாற்றி, மரபியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கினால் என்னவாகும் என்பது ‛கைமேரா' படத்தின் கதை. மாணிக்ஜெய் இயக்க, புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. ‛கைமேரா' என்பது மராத்திய மொழி வார்த்தை. இதற்கு மரபணுக்கள் மாற்றம் என அர்த்தமாம்.
கிரேக்க புராணத்தில் பல்வேறு விலங்குகளின் உடல்பாகம் கொண்ட கொடூர விலங்கிற்கும் இந்த பெயர். பெங்களூருவைச் சுற்றி நிகழும் கதைக்களம் என்பதால் கர்நாடகாவில் பெங்களூர், ஹம்பி, இங்கே ஓசூர், ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மரபணு மாற்றப்பட்ட மனநிலையில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் படப்பிடிப்பு முடிந்த கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே அதிலிருந்து மீண்டு இருக்கிறார் ஹீரோ எத்தீஷ்.
மனிதனும், பாம்பும் இணைந்த மாதிரி அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது ரிலீஸாக இருக்கிறது.