இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கோபியாக நடித்து கலக்கி வருபவர் நடிகர் சதீஷ் குமார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே சதீஷ் குமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதோடு, பாராட்டுகளையும் பெற்று வருகிறார். வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட ஒரு ஹீரோவுக்கு இணையாக தான் ரசிகர்கள் இவரை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தனது பழைய புகைப்படத்துடன் நகைச்சுவையான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ச்சே... ஹீரோன்னு நினைச்சோம். வில்லன் ஆக்கி விருது குடுத்துட்டாங்க. வில்லனுக்கு ரெண்டு ஹீரோயின். எந்த கதையில இப்படி வருது. அப்போ நான் நல்லவனா? கெட்டவனா?. இல்ல நீ வல்லவன்' என பதிவிட்டு அதை தனது கதாபாத்திரமான கோபியின் மைண்ட் வாய்ஸ் என குறிப்பிட்டுள்ளார். இதைபார்க்கும் ரசிகர்களோ 'உங்களுக்கு சிறந்த நடிகர்' பிரிவில் விருது வழங்கியிருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.