ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கடைசிவார எவிக்ஷனாக யார் வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் திக் திக் நொடிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஹவுட்ஸ்மேட்டுகள் பலரும் தாமரைக்கு எதிராக இருந்ததால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என கருத்துகள் பரவியது.
ஆனால், பிக்பாஸ் தாமரையை காப்பாற்றி, அபிராமியை எலிமினேட் செய்துவிட்டார். பினாலே வாரத்தின் எவிக்சன் டாஸ்கில் போட்டியாளர்கள் மீது நெருப்பு பொறி கொட்டப்படுகிறது. அப்போது போட்டியாளர்களை அதிலிருந்து காப்பாற்றும் சேவ்ட் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் அனைத்து ஹவுஸ்மேட்டுகள் மீதும் விழுகிறது. அபிராமி மீது மட்டும் விழவில்லை. இதனை தொடர்ந்து பிக்பாஸ் அபிராமி எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கிறார். அபிராமி தனது சக போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.