சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

பைக் ரேஸ், விபத்து, பஞ்சாயத்து என அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் டிடிஎப் வாசன், பல மாதங்களுக்கு முன்பு 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் ஹீரோ ஆனார். அவருக்கும் இயக்குனர் செல்அம் என்பவருக்கும் பிரச்னை வர, அவரை துாக்கிவிட்டு, கூல்சுரேசை வைத்து படத்தை தொடங்கினார் இயக்குனர். ஆனாலும், ஹீரோ ஆசை காரணமாக 'ஐபிஎல்' என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து இருக்கிறார் டிடிஎப் வாசன்.
சென்னையில் நடந்த இந்த படவிழாவில் மேடையில் பேசிய போஸ் வெங்கட், நடிகை அபிராமி உட்பட பலரும், ஹீரோ டிடிஎப் வாசனுக்கு அட்வைஸ் செய்தனர். எந்த பிரச்னையிலும் சிக்கக்கூடாது என்றனர். நீ ஸ்வீட் ஆக இருக்கணும்னு அபிராமி கூடுதலாக சொன்னார். ஹீரோ ரேஸர் என்பதால் அவருக்கு ரேசிங் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்குவதாகவும் படக்குழு அறிவித்தது.
சில உண்மை சம்பவங்கள் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது. ஐபிஎல் என்றால் இந்தியன் பீனல் லா என அர்த்தமாம். அஜித் மாதிரி எனக்கும் பைக் ரேசில் கலந்து கொள்ள ஆசை. சில பிரச்னைகள் காரணமாக என் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அது வந்தவுடன் மலேசியாவில் நடக்கும் ரேசில் கலந்துகொள்வேன். என் முதல் படம் தொடங்காமலே முடங்கியது வருத்தம் என டிடிஎப் வாசன் கூறியுள்ளார்.