பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல்நல பிரச்சனையால் இன்று (டிச.,04) காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் மா சுப்ரமணியம், மதிமுக.,வின் வைகோ, கனிமொழி எம்பி, அதிமுக.,வின் ஜெயக்குமார், நா.த.க. சீமான் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.



நடிகர்கள் சிவகுமார், சூர்யா, பார்த்திபன், மோகன் ராமன், ராட்சசன் சரவணன், டிவி வரதராஜன், செல் முருகன், பிரமிடு நடராஜன், ஒய்ஜி மகேந்திரன், ஈஸ்வரி ராவ், விஷால், விக்ரம் பிரபு, புனிதா பிரபு, சின்னி ஜெயந்த், கருணாஸ், மணிரத்னம், பிசிஸ்ரீராம், மோகன், அருண் விஜய், விஜயகுமார், சித்ரா லட்சுமணன், துஷ்யந்த், ஆனந்த்ராஜ், சினேகன், நாசர், ஜீவா, பாண்டியராஜன், ஆர்த்தி, கணேஷ், கே பாக்யராஜ், ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனர்கள் விசி குகநாதன், வசந்த் சாய், எஸ்பி முத்துராமன், பி வாசு, பேரரசு, ஆர்வி உதயகுமார், எழில், ஷங்கர், ராஜகுமாரன், தயாரிப்பாளர்கள் முரளி ராமன், விஷன் டைம் ராமமூர்த்தி, விஜயா புரொடக்ஷன்ஸ் விஸ்வந்தா ரெட்டி, கேடி குஞ்சுமோன், தனஞ்செயன், முரளி ராமசாமி, சவுந்திர பாண்டியன், கல்யாணம், ஒளிப்பதிவாளர் கேஎஸ் செல்வராஜ், பெப்சி விஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சிவகுமார்
எனக்கு அடுத்த தலைமுறையான சூர்யாவிற்கு ‛பேரழகன், அயன்' போன்ற படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம். சூர்யாவிற்கு படம் செய்யும் பொழுது சூர்யாவிற்கு என்ன சம்பளம் கேட்கிறார்களோ அதை கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். இரண்டு நாளுக்கு ஒருமுறை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார், நாங்கள் அரை மணி நேரம் பேசுவோம். தமிழகத்தில் ரஜினி, கமலுடைய அதிகமான ஹிட் படங்களை ஏவிஎம் தான் தயாரித்தது.
நடிகர் பார்த்திபன்
ஏவிஎம் என்ற மூன்று எழுத்து மாதிரி பணிவு, பண்பு, ஒழுக்கம் இது எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்தமான உருவம் ஏவிஎம் சரவணன். அவருக்கான மரியாதை என்றும் குறையாது. இதற்கு காரணம் அவர் மட்டுமல்ல, அவரது தந்தை மெய்யப்ப செட்டியாரும் தான். என்னை மாதிரி கலைஞர்களுக்கு அவர் கடவுள் மாதிரி. ஏவிஎம் தொடர்ந்து படங்கள் தயாரிக்கனும், அதில் அவருக்கு அஞ்சலி கார்டு போடணும் என அவரது குடும்பத்தாரிடம் சொல்லி உள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
இயக்குனர் பி வாசு
சரவணன் அவர்களுடைய மரணம் என்ன பேசுவது என்று தெரியாமல் உள்ளது. எத்தனையோ இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை உருவாக்கியவர் சரவணன். அவரிடம் நிறைய பேசியுள்ளேன் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். ஒழுக்கம் என்றால் என்ன என்பதற்கு அவர் தான் அடையாளம். ஒரு அழைப்பிதழ் பெற்றால் அது யாராக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார். சரவணன் எழுந்து நடந்து வரும்போது நாம் அவருக்கு மரியாதை செலுத்த அதுவாக வந்துவிடும். மிகவும் அற்புதமான மனிதர். ஏவிஎம் நிறுவனத்தின் ஒரு பில்லர் கீழே விழுந்தது போல் ஆகிவிட்டது.
நடிகர் விக்ரம் பிரபு
ஏவிஎம் நிறுவனத்தில் தான் எல்லாமே தொடங்கியது. தமிழ் திரையுலகம் தற்போது வரை இருப்பதற்கு காரணமே ஏவிஎம் ஸ்டுடியோ தான். சரவணன் சாருக்கு நிறைய கனவுகள் இருந்தது. எங்கள் தலைமுறையில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தவர். தாத்தா, அப்பா எல்லோரும் இங்கு தான் பணியாற்றினார்கள். சினிமாவைத் தாண்டி குடும்பமாக நெருக்கமானவர்.
நடிகர் வையாபுரி
தமிழ் சினிமாவின் அடையாளம் சரவணன் சார். சாட்டிலைட் இல்லாத காலத்தில் சென்னைக்கு வரும் எல்லோரும் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு தான் வருவார்கள். ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் நான் நடித்திருப்பது மகிழ்ச்சி.
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்
ஏவிஎம் சரவணன் அவர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஏவிஎம் சரவணன். அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும்.
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்
நான் வாழ்ந்த வீடு இது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக இங்கு தான் பணியாற்றினேன். காலையில் எட்டு மணிக்கு வந்தால் இரவு 9 மணிக்கே செல்வேன். சரவணன் சார் என்னை அழைத்து பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒன்றை செய்ய சொன்னார். அது மறக்க முடியாத நிகழ்வு.
இயக்குனர் உதயகுமார்
ஏவிஎம் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யதை வழி நடத்தி மிகப்பெரிய வெற்றி பாதைக்கு கொண்டு சென்றவர் சரவணன். அவர் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தத்தையும், வலியையும் கொடுக்கிறது. ஒரு இயக்குனருக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்க வேண்டுமோ அத்தனையும் கொடுத்தவர் சரவணன். படத்திற்கான பூஜை போடும் தினம் அன்று முழு பணமும் கொடுக்கும் நிறுவனம் ஏவிஎம். படப்பிடிப்பு நடக்கும் போது குடும்ப உறுப்பினர் போல பார்த்துக் கொள்ளும் தயாரிப்பு நிறுவனமாக ஏவிஎம் இருந்தது. இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை உருவாக்கியவர் சரவணன்.
இயக்குனர் பேரரசு
படங்களை பிரமாண்டமாக எடுப்பதில் ஏவிஎம் நிறுவனம் தனித்தன்மை கொண்டது. முரட்டுக்காளை என்ற பிரமாண்ட படம் தான் ரஜினிகாந்த் அவர்களை எல்லா இடத்திற்கும் கொண்டு சேர்த்தது. பாமர மக்களுக்கான படங்களை கொடுத்தவர் சரவணன்.
நடிகர் ஆனந்த ராஜ்
ஏவிஎம் நிறுவனம் மனிதனுக்கு முதுகெலும்பு மாதிரி. நிறுவனத்தின் கடைசி செல்லப்பிள்ளை சரவணன். எனக்கும் இந்த நிறுவனத்திற்கும் நிறைய மலரும் நினைவுகள் உள்ளன.
நடிகர் நாசர்
ஏவிஎம் நிறுவனத்துடன் நீண்ட நாட்களாக பயணம் செய்து வருகிறேன். பொதுவெளியில் வரும்போதும் கையை கட்டிக்கொண்டு வருவது பணிவுடன் இருப்பது எல்லோருக்குமான பாடம். ஒரு நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என பெரிய கல்லூரி ஆக இருந்தது ஏவிஎம் நிறுவனம். அவரோடு பழகிய நாள் அவர் தயாரித்த படங்களில் நடித்த நாட்களில் நிறைய நினைவுகள் உள்ளது.
நா.த.க., சீமான்
சரவணன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தமிழ் சினிமாவில் ஏவிஎம் நிறுவனம் மேற்கொண்ட பணிகள் மிகப்பெரியது. விடுதலைக்கு முன்பே விடுதலை குறித்த பாடல்களை எல்லாம் திரையில் கொண்டு வந்தது இந்த நிறுவனம். தனது பேராற்றலால் ஆகச் சிறந்த படைப்புகளை ஏவிஎம் நிறுவனம் மூலம் சரவணன் அவர்கள் கொடுத்துள்ளார். அவர் நம்முடன் இல்லை என்பது பெரும் துயரம்.
அதிமுக., ஜெயக்குமார்
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அன்பு சகோதரர் சரவணன் அவர்களின் மறைவு, தமிழ் சமுதாயத்திற்கு மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் மிகப்பெரிய இழப்பு. அவரோடு பழகிய நாட்கள் என்றும் பசுமரத்து ஆணி போல நினைவில் உள்ளது. ஏவிஎம் தயாரிப்பில் மிகவும் பிரபலமான படம் அன்பே வா. ஏவிஎம் தயாரிப்பில் வெளியான "அந்த நாள்" படம் மிகவும் சுவாரசியமானது. தற்போது இருப்பது போல் அந்த காலத்தில் லாக்கப் மரணம் கிடையாது. தற்போது லாக்கப் மரணம் அதிகரித்துள்ளது. திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் அவரிடம் வாய்ப்பு கேட்டேன். சரவணன் அவர்களின் பணிவு மிகப்பெரியது. ஏவிஎம் சரவணன் என்றாலே வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் அதுதான் அவரின் அடையாளம்.அவரால் அடையாளம் காணப்பட்டவர்கள் திரையுலகில் முன்னணியாக வந்துள்ளனர்.
நடிகர் பவன் கல்யாண்புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தியத் திரைப்படத் துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஏ.வி.எம். நிறுவனத்தை சரவணன் திறமையாக நடத்தினார். அவர் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து, முழு குடும்பத்தினரும் பார்க்கக்கூடிய படங்களைத் தயாரித்தார். சிரஞ்சீவியுடன் தயாரிக்கப்பட்ட “புன்னமிநாகு” திரைப்படம், தலைமுறை இடைவெளியைப் பொருட்படுத்தாமல் இன்றும் பார்வையாளர்களைக் கவர்ந்துவருகிறது. “சம்சாரம் ஓக சதுரங்கம்”, “ஆ ஒகடி அடக்கு”, “லீடர்”, “மெருபுகலலு, “சிவாஜி” போன்ற படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.