ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அதற்குள் போட்டியாளர்கள் யாராவது ஒருவர், பணத்துடன் வெளியேறும் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. பணப்பெட்டியின் ஆரம்ப தொகை 3 லட்சமாக இருந்த போது நிரூப் அதை எடுத்துக் கொண்டு வெளியேறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையல்ல. 6, 7, 8 லட்சம் என படிப்படியாக உயர்ந்த போது ஜூலி மட்டுமே லேசாக ஜெர்க் கொடுத்தார். எனவே, அவர் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
தாமரையின் குடும்ப சூழலை வைத்து அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொள்ளலாம் எனவும் மக்கள் பரிந்துரை செய்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்ருதி பெரியசாமி பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேற ஸ்ருதி, ஜூலி முயன்றனர். இவர்களுக்கு சில டாஸ்கள் வைக்கப்பட்டன. இதில் ஸ்ருதி வெற்றி பெற்று 15 லட்சம் பணத்துடன் ஸ்ருதி வெளியேறினார். இதுவரை டப் கொடுத்து விளையாடிய ஸ்ருதிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.