ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர முகங்களில் ஒருவர் சிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு சிவாங்கிக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் கோமாளியாக என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார்.
பாட்டு, ஆங்கரிங், நடிப்பு என தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் சிவாங்கியை பலரும் சமூகவலைதளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாட்டு, நடிப்பு மட்டுமல்ல நாங்க நடனத்திலேயும் கலக்குவோம் என டிரெண்டிங் பாடல்களுக்கு நடனமாடி சிவாங்கி பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ரிலீஸாகி வைரலான பீஸ்ட் படத்தின் 'அரபிக் குத்து', அனிருத் பாடிய 'மயக்கிறியே சிரிக்கிறியே' ஆகிய பாடல்களுக்கு நடனமாடியுள்ள வீடியோவை சிவாங்கி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள் சிவாங்கியின் நடனத்தை போற்றி புகழ்ந்து வருகின்றனர்.