ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா திரைப்படம் வெளியானது. படம் ஹிட்டானதோ இல்லையோ, படத்தின் இரு பாடல்களும் சமூக வலைத்தளங்களை இன்றளவும் ஆட்டம் போடச் செய்கிறது. அந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான 'சாமி சாமி' பாடலுக்கு ராஷ்மிகா அருமையாக நடினம் ஆடியிருப்பார். அதை பார்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக், ரீல்ஸ் வீடியோ செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் நகைச்சுவை மன்னரான என்னம்மா ராமரும், ஏற்கனவே இந்த பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.
தற்போது அவர் மீண்டும் சாமி சாமி பாடலுக்கு நடனமாட, ராமருடன் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட், ஈரோடு மகேஷ் உள்ளிட்டோரும் சேர்ந்து நடனமாடுகின்றனர். அதிலும் ராமர் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளில் அடித்து நொறுக்கி ஆடியுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.